செவ்வாய், 11 செப்டம்பர், 2018

நீயே முடிவு செய்...... (By Danya Iyengar)

எரிக்கும் மின்னலா, அல்ல இருட்டை போக்கும் ஒளியா
சுழலும் புயலா, அல்ல சில்லென்று வீசிய காற்றா
வெடிக்கும் குண்டா, அல்ல வழி தோறும் விளக்கா
பொய் சாக்கா, அல்ல நேர்மையுள்ள காரணமா
பெரிய பிழையா, அல்ல கற்றுக்கொள்ள வாய்ப்பா
இன்மை வெற்றிடமா, அல்ல முடிவற்ற விண்வெளியா
அடக்காத முரட்டா, அல்ல அடிமை வெல்லிய சுதந்திரமா
குருட்டு வெறியா, அல்ல சமாதானம் தரும் பிரார்த்தனையா
குழப்பம் கூடிய கலவரமா, அல்ல அமைவி உறங்கும் சட்டமா
சீரற்ற பழியா, அல்ல அமைதியுள்ள மன்னிப்பா
அழிக்கும் பிரளயமா, அல்ல கரைக்கு முத்தமிடும் அலையா

உன் வாழ்க்கை என்னவென்று, நீயே முடிவு செய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக