ஞாயிறு, 10 மார்ச், 2019

ஏன் இப்படி செய்தாய்? (By Danya Iyengar)


உன்னில் வெளிப்பட்ட நன்மையை பார்த்து நேசித்தேன்
வெளிமறைந்த தீங்கை நான் காணவில்லையே
கூச்சமில்லாமல் என் கவலைகளை உன்னில் ஒப்படைத்தேன்
சந்தர்பவாதியாய் அதை  பயன்படுத்தினாயே
காரணம் இல்லாமல் உன்னை காதலித்தேன்
வெறுக்க பலகாரணங்களை கொடுத்தாயே
யோசிக்காமல் என் உயிரை உன்னில் கொடுத்தேன்
திட்டமிட்டு என் வாழ்க்கையை அழித்தாயே!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக