சனி, 9 மார்ச், 2019

என்ன செய்ய போகிறாய்? (By Danya Iyengar)

கேட்கும் வினாவுக்கு விடைதேடி செல்வாயா,
அல்ல, கேட்காத கேள்விக்கு பதில் சொல்வாயா?
கண்களுக்கு தெரியும் நோக்கத்தை மட்டும் பார்ப்பாயா,
அல்ல, கண்காணாகாட்சிகளை புரிந்து கொள்வாயா?
குரல் கொடுத்து கூவும் கவலைகளை தீர்ப்பாயா,
அல்ல, ஒலியில்லா அலறலுக்கும் விடைகொடுப்பாயா?
கும்பலின் பகுதியாய் நீயும் கலந்துவிடுவாயா,
அல்ல, ஆயிரத்தில் ஒருவனாய் கூட்டத்தை எதிர்த்து நிற்பாயா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக