வியாழன், 7 பிப்ரவரி, 2019

சத்தம் சத்தம்...... (By Danya Iyengar)

சத்தம் சத்தம் போர் சத்தம் இது
யுத்தம் யுத்தம் மனதில் யுத்தம் ஏது
பண்பு பண்பாடு எங்கே மறைந்தன
செல்வம் செல்வாக்கு நம்மை விட்டு பிரிந்தன

சத்தம் சத்தம் போர் சத்தம் இது
யுத்தம் யுத்தம் மனதில் யுத்தம் ஏது   
கண்ணியம் கட்டுப்பாடு  கைவிட்டு சிதைந்து
அதிகாரம் புகழ்ப்பின்னே ஓடி சென்றது

சத்தம் சத்தம் போர் சத்தம் இது
யுத்தம் யுத்தம் மனதில் யுத்தம் ஏது  
நியாயம் சத்தியம் அடிமைப்பெற்றன
நீதி நேர்மை விழுந்து இழந்தன

சத்தம் சத்தம் போர் சத்தம் இது
யுத்தம் யுத்தம் மனதில் யுத்தம் ஏது  
அன்பு பாசம் ஓடி ஒளிந்தன
கடமை காதல் சுட்டு எரிந்தன

சத்தம் சத்தம் போர் சத்தம் இது
யுத்தம் யுத்தம் மனதில் யுத்தம் ஏது  
குறிகோள் நோக்கம் தவறிவிட்டன
மானம் மதிப்பு எங்கே தொலைந்தன  

சத்தம் சத்தம் யாரால் இந்த சத்தம்
யுத்தம் யுத்தம் எதற்க்காக இந்த யுத்தம்
இதெல்லாம் கலியுகத்தின் பலனா?
ல்ல மனித இனத்தின் பரிசா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக